
தோக்கியோவில் நடைபெற்று வரும் பெரா ஒலிம்பிக் போட்டியில் நேற்று மலேசியா 3 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றது.
நீளம் தாண்டும் போட்டியில் 7.45 மீட்டர் தூரத்தை தாண்டி நாட்டுக்கு 3ஆவது தங்கப் பதக்கத்தை அப்துல் லத்தீப் பெற்றுத் தந்தார்.
பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ரம்லி நீளம் தாண்டும் போட்டியில் எதிர்பார்த்ததைப் போல் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மலேசியா விளையாட்டாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
எடைத்தூக்குதல் போட்டியில் முதல் தங்கமும் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது தங்கம் மலேசியாவுக்கு கிடைத்தன.
இப்போது நீளம் தாண்டுதல் போட்டியில் 3ஆவது தங்கம் மலேசியாவுக்கு கிடைத்துள்ளது..
