28.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

விளக்கம் தரும்படி நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கு உத்தரவு

🔥 Views : 7
👁 Reading Now : 35

இந்த வாரத்தில் கெஅடிலான் கட்சியின் தலைவர்கள் மன்றம் கூட்டம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விளக்கம் அளிக்கும் படி நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் கேட்டுக்கொள்ளப் பட்டிருப்பதாக கட்சியின் தகவல் வியூக இயக்குனர் பாமி பாட்சில் தெரிவித்தார். நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் மீது மாநில கெஅடிலான் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது உள்கட்சி பிரச்சினையாக இருந்தாலும் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்று ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ எம் ரவி, சுவா சட்டமன்ற உறுப்பினர் இக் டியூ சின், லாபு சட்டமன்ற உறுப்பினர் இஸ்மாயில் மற்றும் அம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் முகமட் மாலிக் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles