
12-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்திய சமுதாயம் எட்ட வேண்டிய அணுகூலம் குறித்து இந்திய சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட எந்தத் தரப்பும் குரல் கொடுக்கவில்லை என்று சமூகவியல் நிபுணர் டெனிசன் ஜெயசூரியா கூறியுள்ளதை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மறுத்தார். இத்திட்டத்தைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம், கலந்துரையாடல்கூட எங்கும் இடம்பெறவில்லை என்று டெனிசன் கூறியுள்ளார். இதுபற்றி கருத்துரைத்த சார்லஸ் சாந்தியாகே கடந்தாண்டு டிசம்பர் மாதம் 12ஆவது மலேசிய திட்டத்தில் இந்திய சமூகத்தின் அனுகூலங்கள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், அரச சார்பற்ற இயக்கத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முறையாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்றார் அவர். இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற குணசேகரன் கந்தசாமி கூறுகையில் இந்த கலந்துரையாடல் தொடர்பான செய்திகள் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்தன என்றார் அவர்.
