31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

கோவிட் நோய்த்தொற்றை தடுக்கும் போராட்டத்தில் அரசாங்கத்திற்கு உதவும் இ.பி. ஹோல்டிங்ஸ் நிறுவனம்

🔥 Views : 6
👁 Reading Now : 65

நாட்டில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த போராடும் அரசாங்கத்திற்கு உதவும் வகையில் இ. பி. ஹோல்டிங்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. 3 கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்டிருக்கும் மலேசியாவில் தற்போது அதிகளவில் வெளிநாட்டு தொழிலாளர்களும் உள்ளனர். மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் நோய்த் தொற்றை தடுக்க அரசாங்கம் போராடி வரும் வேளையில் இ.பி. ஹோல்டிங்ஸ நிறுவனமும் உதவ முன் வந்திருப்பதாக அதன் தலைமை செயல் முறை இயக்குனர் டத்தோ இமானுவேல் பென்சன் தெரிவித்தார். தடுப்பூசி போடும் பணிக்கு உதவும் வேளையில் நோய்த்தொற்று மருத்துவப் பரிசோதனைக்கும் இ.பி. ஹோல்டிங் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles