
பேராக் மாநிலத்தில் தெலுக் இந்தான் தொகுதி யாருக்கு மோதல் இப்போது என்ற மோதல் முற்றுகிறது.
எதிர்க்கட்சிகளின் கோட்டையாக விளங்கும் இந்த தொகுதியில் போட்டியிட மஇகா தீவிரமாக வேலை செய்ய தொடங்கிவிட்டது.
2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த தொகுதியில் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா பணியாற்றி வருகிறார்.
தினசரி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டிருக்கிறார்.
அடுத்த பொதுத் தேர்தலில் இவர்தான் இங்கு போட்டியிடப் போகும் தேசிய முன்னணி வேட்பாளரை இன்று கூறப்பட்டது. ஆனால் இப்போது பேரா சங்காட் ஜோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஸாஹர் தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்வழி இவரும் இங்கு போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கெராக்கான் கட்சியின் பாரம்பரிய தொகுதியாக இது விளங்கிவருகிறது. இருப்பினும் ஜனநாயக செயல் கட்சி வேட்பாளர் கள் இந்த தொகுதியில் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறார்கள். வரும் பொதுத் தேர்தலில் இந்த தொகுதி யாருக்கு என்பது மஇகா – அம்னோ இடையே பலப்பரீட்சை தொடங்கி விட்டது.



