25.3 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

ஆடம்பர குடியிருப்பில் கஞ்சா செடியை பயிரிட்டு வந்த கணவன் மனைவி கைது

🔥 Views : 15
👁 Reading Now : 60

பினாங்கின் ஆயர் ஈத்தாம் பகுதியில் ஆடம்பர அடுக்குமாடி ஒன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு வந்த கணவன் மனைவியை கைது செய்த போலீசார்,
அவர்களின் வீட்டு வரவேற்பு அறையிலிருந்து 16 பொட்டலம் கஞ்சா மற்றும் ஷாபு வகை போதைப் பொருளை கைப்பற்றினர்.
சுமார் 1,180 வெள்ளி பெறுமானமுள்ள கஞ்சா செடிகளை இரு பூச்சாடிகளில் அவர்கள் பயிரிட்டு வந்தனர் என தீமோர் லாவூட் மாவட்டப் போலீஸ் தலைவர் துணை கமிஷினர் சோபியான் சந்தோங் கூறினார்.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு மேற்கொண்ட சோதனையில்
நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 28 வயது கணவனையும்,36 வயது மனைவியையும் மேல் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles