
கடந்த 07/05/2021 6.40 மணியளவில் 63 வயதான ஆறுமுகம் சுப்பையா மோட்டார் சைக்கிளில் 14 வயதாக தனது பேரன் பரமேஸ்வரன் தனபாலை சுங்கை காங் லாஞ்சாங்கிலிருந்து (S.M.K Karak Setia) பள்ளிக்கு அழைத்து வரும் வழியில் விபத்து ஏற்பட்டது. ஆறுமுகத்தின் மகன் சுந்திரமூர்த்தியிடம் இச்செய்தி தெரிவிக்கபட்டது. அவர் உடனே நேராக சம்பவ இடத்திற்குச் சென்று தனது தந்தையையும், அண்ணன் மகனையும் காரக் சுகாதார கிளினிக்கு (Klinik kesihatan Karak) அழைத்துச் சென்றார். பின்னர் காலை 9 மணியளவில் சுகாதார கிளினிக் ஊழியர்கள் வரும் வரை, சுந்திரமூர்த்தி அவசரநிலைக்கு அழைத்து முயற்சி செய்தபோது யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுந்தரமூர்த்தியிடம் அவரது அண்ணன் மகன் பரமேஸ்வரனுக்கு ஒரு சிறிய காயம் மற்றும் அவரது கை வீக்கத்திகும் வலிகக்கும் மட்டும் மருந்துகள் வழங்கப்பட்டதாகவும், அவரது தந்தை ஆறுமுகத்திக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் வழங்கப்பட்ட பின்னர் அவரை தெமெர்லோ (Temerloh) மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பும்படி கூறினார்கள். இருப்பினும், பரமேஸ்வரனின் வலி மிகவும் வலுவாக இருந்ததால் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் திருப்தி அடையவில்லை.

உடனே பரமேஸ்வரனின் குடும்பத்தினர் கையில் ஊடுகதிர் (X-ray) எடுக்க வேண்டும் என்று கூற, கோரிக்கையை கரக் சுகாதாரத் துறை புறக்கணித்தது. எனவே, சுந்திரமூர்த்தி பரமேஸ்வரனை ஒரு தனியார் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று, ஊடுகதிர் (X-ray) எடுத்தபோது பரமேஸ்வரனின் வலது முழங்கையில் எலும்பு முறிவு இருப்பதாக கண்டறியப்பட்டது. சுந்திரமூர்த்தி உடனடியாக அவரது தந்தையும் மற்றும் பரமேஸ்வரனையும் தெமெர்லோ (Temerloh) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சை அளிக்கப்பட்டபோது, ஆறுமுகத்க்கு தையல் செய்வதற்கு முன்பு சுத்தம் செய்யப்படவில்லை மேலும் அவரது கால் காயங்களில் மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரக் சுகாதார கிளினிக் (Klinik kesihatan Karak) ஆரோக்கியத்தின் அலட்சியம் குறித்து ஆறுமுகம் மற்றும் பரமேஸ்வரன் குடும்பங்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளன. இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் நடக்க கூடாது என்று புகார் செய்ய அவர்கள் சபாய் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்தார்கள். கராக் சுகாதார கிளினிக் (Klinik kesihatan Karak) ஊழியர்கள் எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சபாய் சட்டமன்ற உறுப்பினர் YB காமாச்சி துறைராஜூ வலியுறுத்தினார். இதை போன்று பல நோயாளிகள் காரக் சுகாதார கிளினிக்கால் (Klinik kesihatan Karak) செய்யப்படும் அலட்சியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து புகார் கூறுகிறார்கள்.
