34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

ஆலயங்களில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களுக்கு அனுமதி!

🔥 Views : 12
👁 Reading Now : 32

மக்கள் நடமாட கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் ஆலயங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் தெரிவித்தார்.
மே 12ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரை எம் சி ஓ அமலில் இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் ஆயிரம் பேர் கூடும் வசதியைக் கொண்ட ஆலயங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
தினசரி காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பூஜைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
பூஜை தொடங்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னரும் பூஜை நடைபெற்ற 30 நிமிடத்திற்கு ப முடிந்த பின்னரும் ஆலயத்தை சுத்தப்படுத்தும் பணியை ஆலய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles