
அந்நிய பிரஜைகளுக்கு நேரடியாகச் சென்றுத் தடுப்பூசிச் செலுத்தும் முறையை பினாங்கு மாநிலம் இன்று மேற்கொண்டது.
பினாங்கு கெப்பாளா பாத்தாசிலுள்ள மில்லினியம் மண்டபத்திற்கு வந்த அந்நிய பிரஜைகள் எஸ்.ஒ.பி.யைப் பின்பற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் தாம் ஒரு முதலாளி என்ற முறையில் தமது 3 மியன்மார் தொழிலாளர்களும் தடுப்பூசிச் செலுத்தி விட்டதை உறுதிப்படுத்த வேண்டியது தமது கடப்பாடு என்று வாகன சாயம் அடிக்கும் நிறுவன முதலாளி, சூய் போக் குவான் (வயது 52) தெரிவித்தார்.
அந்நியப் பிரஜைகள் நேரடியாக வந்து தடுப்பூசிச் செலுத்திக் கொள்ளலாம் என்று பினாங்கு மாநில அரசு அறிவித்த பிறகுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
காரணம் அவர்கள் 3 மாத காலமாக வேலை செய்யவில்லை என்றார் க.



