34.7 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

காரணங்கள் கூறி தட்டிக் கழிக்க வேண்டாம்! ராணுவத்தில் சேர இந்தியர்களுக்கு அதிக வாய்ப்பை வழங்குங்கள்

🔥 Views : 8
👁 Reading Now : 68

ராணுவத்தில் சேர இன ரீதியாக இட ஒதுக்கீடு இல்லை என்று ராணுவ தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அப்பெண்டி புவாங் கூறியிருப்பதை பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா வரவேற்றார்.
குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுவதையும் டான்ஸ்ரீ அப்பெண்டி புவாங் மறுத்துள்ளார்.
ராணுவ தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அப்பெண்டி கருத்தை பெரிதும் வரவேற்பதாக குறிப்பிட்ட கருப்பையா, நேர்முகத் தேர்வில் காரணங்கள் காட்டி இந்தியர்கள் தட்டிக் கழிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்
ராணுவத்தில் 21 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது.
அந்த வகையில் ராணுவத்தில் அதிகளவில் இந்தியர்கள் சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் சிறந்த குடிமகனாக நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைக்கும்
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டால் இந்திய இளைஞர்களின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles