
Covid-19 தொற்றினால் மரணம் அடைவோர் ஈமச் சடங்கு கட்டணங்களை சீர்ப்படுத்தி ஒருமுகப்படுத்த வேண்டும் என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கேட்டுக் கொண்டார். சில நேரங்களில் அதிக கட்டணங்கள் விதிக்கப்படுவதாக புகார்கள் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். முன்பு பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் பேராக் மாநிலத்தில் இந்தியர்கள் விவகாரம் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் மூலம் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஆனால் இப்போது பேரா மாநிலத்தில் இப்படி ஒரு குழு அமைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. நோய்த்தொற்றால் மரணமடையும் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல மாநில அரசாங்கங்கள் நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் பேரா மாநிலத்தில் நோய்த்தொற்று நோயால் மரணமடைந்த இந்தியர்கள் குடும்பங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை மாநில அரசு அறிவிக்க வேண்டும். மேலும் நோய் தொற்றால் மரணம் அடைவோர் ஈமச்சடங்கு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




