
ஆலயத்திற்குச் சென்றதாக கூறப்படும் கெடாவைச் சேர்ந்த 43 வயது குடும்ப மாது எல்.ஹேமாவதி தமது காரில் பிணமாக கிடக்க கண்டெடுக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி மாலையில் கெடா தாமான் செப்பிலாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்றதாக நம்பப்படும் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் இளைய சகோதரர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று காலை 8 .00 மணியளவில் சுங்கை கோப் ஜாலான் பத்து பூத்தே,மேரிலேண்ட் அருகே சாலையோர கால்வாயில் காருடன் இறந்து கிடந்தார். கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூலிம் மாவட்டப் போலீஸ் தலைவர் சசாஸி தெரிவித்தார். இவர் அணிந்து இருந்த நகைகள் அப்படியே இருந்ததாக அவர் சொன்னார். இவரின் மரணத்தை ஒரு விபத்து என்று வகைப்படுத்தப்படுகிறது.



