
உலகில் பயங்கரவாதத்தை தடுக்கும் முயற்சிகளில் ஐநா சபையின் உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டார். ஜநா சபையில் வீடியோ மூலம் உரையாற்றிய அவர் மலேசிய தனது வெளியுறவு கொள்கையின் மூலம் அமைதியை வளர்க்கவும் மோதலை தடுக்கவும் தன்னால் முடிந்ததை செய்யும் என்று குறிப்பிட்டார். பல இடங்கள் இன்னும் நிலையற்ற சூழ்நிலையில் உள்ளது. ஆகவே போர்நிறுத்த கனவை நனவாக்குவதில் இருந்து வெகு தொலைவில் நாம் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.



