
தேசிய முன்னணிக்கான ஐபிஎப் கட்சியின் விசுவாசத்தையும், பிளவுப்படாத ஆதரவையும் வழங்கி வரும் ஜபிஎப் கட்சி வரும் 15 -ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென ஐபிஎப் பேரா மாநிலத் தலைவர் வீ.மாணிக்கம் கேட்டுக் கொண்டார். அப்படி போட்டியிட பேரா மாநிலத்தில் எந்த தொகுதியை வழங்கினாலும், அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சொன்னார். கடந்த 30 ஆண்டுகளாக எந்த பக்கமும் திசை திரும்பாமல் தேசிய முன்னணி – அம்னோவுக்கு மட்டுமே ஆதரவை வழங்கி வருகிறோம் என்பது அனைத்து தேசிய முன்னணித் தலைவர்களும் அறிந்திருக்கின்றனர் இவ்வளவு காலம் ஒரு கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருவதும் ஒரு வரலாறுமாகும் என அவர் தெரிவித்தார். இந்நாட்டு இந்திய சமுதாயத்தின் நலனுக்கும்,எதிர்கால நல்வாழ்விற்கும் அமைக்கப்பட்ட ஐபிஎப் கட்சி என்பது இந்திய சமுதாயத்துக்கு தெரியும். இந்த சமுதாயத்துக்கு தேவையானவற்றை தேசிய முன்னணி அரசாங்கத்தால் மட்டுமே நிறைவேற்றித் தர முடியும். எனவே வரும் பொதுதேர்தலில் ஐபிஎப் கட்சிக்கு உரிய அங்கீகாரத்தை தேசிய முன்னணி தலைமைத்துவம் வழங்குமென பேரா மாநில ஐபிஎப் நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.



