
குடும்ப கொள்கையின் பயன்கள் பற்றி உலகத்திற்கு உபதேசிப்பது சரிதான். அதற்கு முன்னர் அக்கொள்கையை நமது நாட்டில் அமல்படுத்துவதை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி உறுதிப்படுத்த வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி. ராமசாமி வலியுறுத்தினார். உலக அரங்கிற்கு அக்கொள்கையை கொண்டு செல்வதற்கு முன்னர் மலேசியாவில் அமல்படுத்தப்படும் பல கொள்கைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளன என்று அவர் சுட்டிக் காட்டினார். குடும்ப கொள்கை குறித்து உபதேசிப்பதற்கு முன்னர் அதனை நமது நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்துவது அவசியம் என்றார் அவர்



