
கிள்ளானில் இதுவரை எட்டு லட்சம் பேர் மட்டுமே கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் உள்பட அனைத்து தடுப்பூசித் திட்டங்களிலும் பங்கேற்றவர்களை உள்ளடக்கிய இந்த எண்ணிக்கை மைசெஜாத்ரா செயலி வாயிலாக பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார். கிள்ளானில் சுமார் 13 பேர் லட்சம் பேர் உள்ளனர் இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் இன்னும் ஜந்து லட்சம் பேர் இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்று அவர் சொன்னார்.



