
சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாக அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் பத்து லட்சம் மரங்களை நட சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ஆட்சிக்குழு ஹீ லோய் சியான் கூறினார். சுற்றுச் சூழலை மையமாகக் கொண்ட திட்டத்திற்கு நிதி வழங்க மாநில அரசு தயாராக உள்ளது. வர்த்தக மையங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்படும் 20 காசு கட்டணம் மூலம் ஊராட்சி மன்றங்கள் திரட்டிய நிதியை இதற்கு பயன்படுத்தலாம் என்றார் அவர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் செந்தோசாவில் 500 மரங்கள் நடும் இயக்கத்தில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்தார்.



