
கோவிட் தடுப்பூசியைச் செலுத்த மறுக்கும் ஆசியர்கள் மாற்றப்படலாம் என்று கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவது தொடர்பில் வேறு எதுவும் இல்லை என்று கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ரட்சி ஜிடின் தெரிவித்தார். தடுப்பூசிச் செலுத்தாத ஆசிரியர்கள் நேருக்கு நேராக மாணவர்களுக்கு கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனினும், பள்ளிக்குச் சென்று ஒரு சிறப்பு இடத்தில் அவர்களுக்குப் பணிகள் வழங்கப்படடும் என்று அவர் தெரிவித்தார்.



