28.5 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

அம்னோ தடை செய்யப்பட்டபோது பயத்தால் யாரும் மகாதீரை எதிர்க்கவில்லை! தெங்கு ரசாலி குற்றச்சாட்டு

🔥 Views : 6
👁 Reading Now : 69

கடந்த 1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் அம்னோ தடை செய்யப்பட்ட போது,அன்றைய பிரதமர் துன் மகாதீருக்கு பயந்துக் கொண்டு யாரும் அன்று குரல் எழுப்பவில்லை என்று குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா குற்றஞ்சாட்டினார். அன்று அதிகாரம் அவரின் கையில் இருந்தால்,கேள்வி எழுப்ப எந்தவொரு வழக்கறிஞர்களுக்கும் தைரியம் இல்லாமல் போனது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார். அன்றைய அரசாங்கத்தின் ஆட்சி பலம் வலுவாகவும் வழக்கத்திற்கு மாறான அதிகாரத்தை பெற்றிருந்தது. தேசிய தலைமை நீதிபதி மற்றும் மூன்று கூட்டரசு நீதிபதிகளை நீக்கியதும் அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியது. அரசாங்க அதிகாரிகளையும் மிரட்டியதோடு மட்டுமல்லாது அவர்களை பதவி இறக்கமும் செய்யப்பட்டது. உள்நாட்டு பாதுகாப்பு சட்டமும் அனைவரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியதால் துன் டாக்டர் மகாதீரின் நடவடிக்கையை தட்டிக் கேட்க முடியாது நிலை இருந்ததாக தெங்கு ரசாலி ஹம்சா அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles