
12ஆவது மலேசியத் திட்டத்தில் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் பூமிபுத்ராக்களுக்கு அதிகாரமளிப்பதில் எந்த மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று எதிர்கட்சித் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர், சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மானும் நாடாளுமன்றத்தில் கேள்வியை எழுப்பினர். இத்திட்டம் உண்மையில் அரசியல்வாதிகள், குரோனிகளுக்குத்தான் இலாபத்தை ஈட்டித் தரும். மாறாக வறுமையில் இருப்பவர்களுக்கு அல்ல. தம்மைப் பொறுத்தவரை இந்த 12ஆவது மலேசியத் திட்டத்திலுள்ள சமபங்குரிமைக் கொள்கை அரசியல் செலவாக்குக் கொண்ட பணக்காரர்களுக்குத்தான் சாதகமாக இருக்கும். இந்த கூற்றைக் கடந்த காலத் திட்டங்கள் நிரூபித்துள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.



