
12 ஆவது மலேசியத் திட்டத்தில் இடம் பெற்றிருக்கும் மெகா திட்டங்களை ஒத்தி வைக்கும்படி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். விமான நிலையம், இ.சி.ஆர்.எல். எனப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டம், எம்.ஆர்.டி.3 இலகு ரயில் திட்டம் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கஷ்டப்படும் மக்களுக்கு உதவ பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மக்கள் பட்டினி, வேலையின்மை, உணவின்மை, சிறப்பான கல்வியின்மை போன்ற பிரச்சனைகளை எதிர் நோக்கியிருக்கிறார்கள்இந்நிலையில் மெகா திட்டங்களை அமல்படுத்துவதால் என்ன பலன் கிட்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.



