
வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் போட்டி டும்படி கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பேரா கெஅடிலான் தலைவர் பார்சா வாபா செல்வடோர் கேட்டுக் கொண்டார். பேராவில் எந்த இடத்தில் போட்டியிட்டாலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மகத்தான வெற்றி பெறுவார் என்று அவர் சொன்னார் . டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேராவில் போட்டியிட்டால் அதை வரவேற்போம் என்று பேராக் மாநில மந்திரி பெசார் தெரிவித்தார். இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்கொள்ள பேரா மாநில பாஸ் கட்சி தயாராக இருப்பதாக அதன் செயலாளர் முகமட் அக்மால் தெரிவித்தார்.



