28.8 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

அவர்கள் மலாய்க்காரர்களாக பிறக்காதது ஒரு தவறா? நாடாளுமன்றத்தில் சைடி சாடிக் கேள்வி

பூமிபுத்ரா அல்லாத மலேசியர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பங்குரிமையை பூமிபுத்ராவுக்கு வழங்கி அவரின் சொத்துடைமையை அதிகரிக்க செய்யும் நடைமுறை நியாயமானது அல்ல என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சாடினார். 12 ஆவது மலேசிய திட்டத்தை நேற்று முன்தினம் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2019 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டினரின் சொத்துடமை 45.5 விழுக்காடு, பூமி பூமிபுத்ராக்களின் சொத்துடமை 17.2 விழுக்காடு, பூமிபுத்ரா அல்லாதவர்களின் சொத்துரிமை 35 விழுக்காடு என்று பிரதமர் அறிவித்தார். வெளிநாட்டு நிறுவனங்களின் பூமிபுத்ராகளுக்கான பங்குரிமை விலக்கு உள்ளது. ஆனால் மலேசியாவில் பிறந்த பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு அந்த சலுகை இல்லை. அவர்கள் மலாய்க்காரர்களாக பிறக்காதது ஒரு தவறா? என அவர் நாடாளுமன்றத்தில் கேள்வியை எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles