
2 கோடியே 50 லட்சம் வெள்ளி மாயமானக் குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணையை மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் முடித்ததைத் தொடர்ந்து அதன் 3 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக சட்டத்துறை அலுவலகம் தெரிவித்தது. இவர்கள் ஆணையத்திடமிருந்து விசாரணை அறிக்கையை நேற்று பெற்றனர். இதில் குற்றஞ்சாட்டுவதற்கு முன்பு அல்லது தொடர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுவதற்கு முன்பு இதை மிகவும் நுணுக்கமாக மற்றும் ஒட்டுமொத்தமாகவும் சட்டத்துறை அலுவலகத்தின் குற்றச்சாட்டுப் பிரிவு ஆராயும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



