
தீயணைப்பு படை வீரர் முகமட் அடிப் மரணம் தொடர்பில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்வரையில் அந்த விசாரணை தொடர வேண்டும் என்று அம்னோ தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டுள்ளார். இவரின் மரணம் தொடர்பில் விசாரணை மூடப்படுகிறது. புதிய ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே இந்த வழக்கு வேண்டும் விசாரணைக்கு வருமென்று தோட்ட மூலத் தொழில் அமைச்சர் ஸூரைடா கமாரூடின் தெரிவித்தார். இவரின் அறிக்கை வேதனை அளிப்பதாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி உண்மை வெளிச்சத்துக்கு வரும் வரை இந்த வழக்கு தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சுபாங் ஜெயா usj 25 இல் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது தீயணைப்புப் படை வீரர் முகமட் அடிப் காயமுற்றார்.



