
முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து பெற்ற 20 லட்சம் வெள்ளி தொடர்பில் உள்நாட்டு வருமான வாரியத்திடம் தெரிவிக்காததோடு மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் போலி அறிக்கையைச் சமர்ப்பித்த 2 குற்றச்சாட்டுகளிலிருந்து அம்னோ தலைமைச் செயலாளர், டத்தோ அகமட் மஸ்லான் விடுவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற துணை சபாநாயகராக வருவதற்கு வழிவிடும் வகையில் இவர் விடுவிக்கப்பட்டாரா என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா கேள்வியை எழுப்பினார். அமாட் மஸ்லானுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அரசு தரப்பு வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது குறித்தும் கேள்வியை எழுப்பிப அவர் அரசு தரப்பு சமரசம் செய்து கொண்டதா என்றும் அவர் வினவினார். 11 லட்சம் வெள்ளி அபராதம் செலுத்திய பின்னர் இரு குற்றச்சாட்டிலிருந்து அமாட் மஸ்லான் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



