
பினாங்கில் மாநிலத்தைச் சேர்ந்த 500 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 500 வெள்ளி மதிப்பில் சம்சோங் கையடக்க மடிக்கணினிகள் வழங்கி கொண்டிருக்கிறோம். இந்த சம்சோங் மணிக் கணினிகள் மலிவானது. அதைப் பயன்படுத்தினால் வெடித்துவிடும் என்று புரளியைக் கிளப்பி கொண்டிருக்கும் தரப்புக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்படும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி எச்சரித்தார். ஒரு சில பள்ளி நிர்வாகமும் இந்த வதந்திகளை பரப்பி வருகிறது. காரணம் மணிக்கணினிகளை வாங்க இவர்களுக்கு ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்பதால் புரளியை கிளப்புகிறார்கள். பினாங்கு மாநில அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளிகளுக்கு 20 லட்சம் வெள்ளி மேல் மானியம் வழங்கி வருகிறது. பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் இணைய கல்வியல் பின்தங்கி விடாமலிருக்க நாங்கள் உதவி வருகிறோம். ஆனால் எங்களுக்கு எதிராக சில குள்ளநரிகள் வதந்திகளை பரப்பினாலும் அதைப்பற்றி அஞ்சமாட்டோம் என்று அவர் பதிலடி கொடுத்தார்.



