
கோலாலம்பூரில் உள்ள சுங்கை பீசி சீனர் ஆலயத்தின் முன் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் விசாரணை தீவிரப்படுத்தப் படவேண்டும் என்று கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் ஜலாலுடின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை விரைந்து விசாரிக்கும்படி அவர் வலியுறுத்தினார். நிலமை கட்டுப்பாட்டுக்கு வந்தாலும் சில தரப்புகள் அந்த சம்பவத்தை தவறாக சித்தரித்து பிரச்சினையை ஏற்படுத்த முயன்றதாக அவர் குறிப்பிட்டார். பள்ளிக்கு செல்வதற்கு ஏதுவாக புதிய சாலை அமைப்பதற்கு அங்கு மண் மன்வாரி இயந்திரம் வந்தபோது சீனர் ஆலயத்தை உடைக்க இந்த மண்வாரி இயந்திரம் வந்திருப்பதாக தவறாக புரிந்து கொண்ட ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் அந்த மண்வாரி இயந்திரத்தை சேதப்படுத்தியதோடு அங்கு கடமையிலிருந்த போலீசாரை நோக்கி தடியால் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.



