32.9 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

மலேசிய நால்வர் மன்ற ஏற்பாட்டில் ஏகனை அறிவோம் இந்து சமய வகுப்பு சிறப்பாக வழிநடத்தப்படுகிறது

🔥 Views : 9
👁 Reading Now : 41

கெடா மாநிலத்தில் நால்வர் மன்ற ஏற்பாட்டில் ஏகனை அறிவோம் இந்து சமய வகுப்பு மிகச் சிறப்பாக வழிநடத்தப்படுவதாக பாலிங் சமூக சேவகர் செகு இராமசாமி பாராட்டினார். மலேசிய நால்வர் மன்றத்தின் செயலாளரும் கெடா மாநில கல்வி இலாகா மொழித்துறை இயக்குநருமான சமயகுரு தமிழ்ச்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலில் கெடா மாநில தலைவரும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் பரிமளா தேவி மற்றும் குழுவினர் மிகச் சிறபாக திட்டமிட்டு நடத்தி வருகின்றனர். கெடாவில் உள்ள தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 1,200 மாணவர்கள் இயங்கலை வாயிலாக இந்து சமய அடிப்படை பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வகுப்புகளை தன்னார்வ முறையில் சுமார் 90 ஆசிரியர்கள் வழிநடத்துவதை பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டுவதாக செகு இராமசாமி கூறினார். தேவாரப் பாடல்கள் பொருளுணர்ந்து பாட மாணவர்களுக்கு ஊக்குவிக்கப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற கூற்றுக்கு ஏற்ப இளையோர்களுக்கு நல்வழிகாட்ட இச்சமய வகுப்பு பேருதவியாக அமையும். கெடா மாநிலத்தில் நமது இந்திய மாணவர்கள் அடிப்படை இந்து சமய தகவல்களை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கும் மலேசிய நால்வர் மன்ற நடவடிக்கையைப் பாராட்டுவதோடு இன்னும் அதிகமான இளையோர் கலந்து கொள்ள வேண்டுமென செகு இராமசாமி வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles