
நாட்டு நிலவரங்கள் குறித்து விவாதிக் , தம்முடன் பொது விவாதம் நடத்த தயாரா என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங்,ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கிற்கு பகிங்கர சவால் விடுத்தார். இருவருக்குமிடையே இன்று நாடாளுமன்றத்தில் காரசாரமான வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் இந்த சவாலை விடுத்தார். அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு விவாதம் நடத்த தாம் தயாராக இருப்பதாக வீ கா சியோங் கூறினார். இருப்பினும் இந்த சவாலை தாம் ஏற்றுக் கொள்வதாக லிம் குவான் எங் சொன்னார். அந்த அமைச்சரின் சவாலை நான் ஏற்கிறேன்.அதற்கான நேரத்தை உடனடியாக நிர்ணயிங்கள் என பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அமைச்சரின் விளக்கத்தில் அவர் அதிருப்திக் கொண்ட போது இருவருக்குமிடையே காரசாரமான கேள்விக் கணைகள் எழுந்தன.



