
அமைச்சர் மற்றும் துணையமைச்சர் வழங்கிய தெளிவற்ற பதிலால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அதிருப்தியை அடைந்தனர். அமைச்சரின் குழப்பத்தை ஏற்படுத்தும் பதிலால் ஏமாற்றமடைந்த சிம்பாங் ரெங்கம் தொகுதி உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக், அமைச்சரால் தெளிவாக விளக்க முடியாவிட்டால் பதிலை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ எட்டின் ஷியாலி பதிலளித்த போது அவையில் இந்த சர்ச்சை எழுந்தது. நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால் உங்கள் பதிலில் எதுவுமே எங்களுக்கு விளங்கவில்லை என்று மஸ்லி மாலிக் தெரிவித்தார். பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் மெக்சிமஸ் ஓங்கிலி பதிலளித்துக் கொண்டிருந்த போதும் மஸ்லி குறுக்கிட்டு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மஸ்லி மாலிக் அந்த கண்டனத்தை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் டத்தோ அஸார் அஜிசான், அனைவரும் புரிந்து கொள்ளும்படி தெளிவாகவும் எளிதான நடையிலும் பதிலளிக்கும்படி அனைத்து அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களை கேட்டுக் கொண்டார்.



