
பிரதமராக இருந்த காலத்தில் Sri Perdana வில் தங்கவில்லை இன்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறியிருக்கிறார். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி பிரதமராக பதவி ஏற்றேன். அப்போது பிரதமர் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பழதுகள் குறித்து அறிக்கையை பெற்றேன். 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெர்டானா பழுது பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இங்கு நான் தங்கியது இல்லை இன்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறியிருக்கிறார். இது தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்த ஸ்ரீ பெர்டானாவில் தங்க வில்லை என்றால் பின்னர் எதற்காக மறு சீரமைப்பு பணிக்கு 3 கோடியை 85 லட்சம் பள்ளி ஒதுக்கப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார்.



