
வரும் 15ஆவதுப் பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகள் இடையே அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தொகுதி உடன்பாடு தீர்வு காண பெரிக்காத்தானின் உறுப்புக் கட்சிகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாக பெர்சத்து தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அம்னோ மற்றும் தே.மு.விடமிருந்து இன்னும் எந்த பதிலும் கிடைக்காதப் போதிலும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தையை அடுத்த வாரம் தொடங்கும் என்று அவர் சொன்னார். இதுவரை அம்னோ மற்றும் தேசிய முன்னணியிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் அரசாங்கத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.



