34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பேட்மிண்டன் வீராங்கனை கிஷோனாவுக்கு இனத்துவேச தாக்குதல்; மஇகா இளைஞர் பிரிவு போலீசில் புகார்!

🔥 Views : 6
👁 Reading Now : 21

சுடிர்மான் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் மலேசியா குழுவுக்கு விளையாடி வரும் இளம் வீராங்கனை கிஷோனாவை இனத்துவேஷமாக முகநூலில் திட்டிய ஆண்டவருக்கு எதிராக ம இகா தேசிய இளைஞர் பிரிவு இந்த போலீசில் புகார் செய்தது. மஇகா இளைஞர் பிரிவு செயலாளர் ஆண்ட்ரூ டேவிட் இன்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மலேசியா 3 -2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிஷோனா 21-20, 18-21, 19-21 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசியாவின் ஜோர்ஜியா மார்ஸ்கா என்பவரிடம் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தோல்வி கண்டார். Borhan che Rahim தனது முகநூலில் Bam kutip India (keling) dlm estate mana la jd pmain utama Malaysia என்று மிக மோசமாக குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதிவு ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் மனதை புண்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எதிராக அரசாங்கம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ட்ரு கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles