29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மலாக்கா மாநில அரசு கவிழ்ந்தது! இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வாபஸ்!

🔥 Views : 7
👁 Reading Now : 70

மலாக்கா மாநிலத்தில் அரசியல் நெருக்கடி முற்றியுள்ள வேளையில் மாநில ஆட்சியும் கவிழ்ந்துள்ளது. மலாக்கா மாநில மந்திரி பெசார் சுலைமான் முகமட் அலிக்கு வழங்கி வந்த ஆதரவை நான்கு சட்டமன்ற உறுப்பினர்களான டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு பேர் மீட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்தனர். மேலும் மலாக்கா மாநிலத்தில் மந்திரி பெசார் சுலைமான் தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்து விட்டதாக டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் தெரிவித்தார் . இதனிடையே மலாக்கா ஆளுநரை சந்தித்து புதிய ஆட்சியை அமைக்க அனுமதி கோர்வோம் என்று மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் தலைவரும் முன்னாள் மந்திரி பெசாருமான அட்லி தெரிவித்தார். மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி மீண்டும் அமைந்தால் ஆட்சிக்குழுவில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சாமிநாதன் இடம் பெறும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் :

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles