
ஈப்போ, தாசேக் டாமாய் தேசிய இடைநிலைப்ப்பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் தடுப்பூசிச் செலுத்தியப் பிறகு மரணமுற்றதாக சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பிய 39 வயது மாதிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர், டத்தோ மியோர் தெரிவித்தார். மேலும் உலு கிந்தா மாவட்டச் சுகாதார இயக்குநர், பள்ளி முதல்வர், மாணவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர், மாணவரின் குடும்பத்தினர், சந்தேக நபருடன் இருந்த சாட்சியாளர்கள் என இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்களையும் பதிவுச் செய்து விட்டோம் என்று அவர் தெரிவித்தார்.



