
நாட்டில் மொத்தம் 527 தமிழ்ப்பள்ளிகளில் 162 பள்ளிகள் அரசாங்கப் பள்ளிகள் என்றும் மீதமுள்ள 365 பள்ளிகள் உதவி பெற்ற பள்ளிகள் என்றும் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா எழுப்பிய கேள்விக்கு கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரஸ்டி ஜிடின் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார். கெடா சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி உட்பட தனியார் நிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் எப்போது அரசாங்க பள்ளிகளாக மாற்றப்படும் என்று மாண்புமிகு கருப்பையா கேள்வியை முன்வைத்தார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கம் , பள்ளி மேலாளர் வாரியம் அனுமதியோடு நிலத்தின் உரிமையாளர் அங்கீரத்தோடு பள்ளி நிலம் முழுவதும் கல்வி அமைச்சு இலாகாவில் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அந்த பள்ளிகள் அரசாங்கப் பள்ளியாக மாற்றுவதற்கு முறையாக விண்ணப்பம் செய்யப்படவேண்டும் என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டிருப்பதாக கருப்பையா தெரிவித்தார்.



