
தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மலேசியாவில் யாரும் மரணம் அடையவில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அதனால் ஏற்பட்ட பக்கவிளைவு சம்பவங்களும் மிகக் குறைவாகும். சுகாதார பிரச்சினைகளுக்காக தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் இருக்கிறதா என்று கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது அதற்கு மருத்துவ நிபுணர்கள் தான் பதில் கூற முடியும் என்று அவர் சொன்னார்.
