
நாட்டில் இனத் துவேஷத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கெஅடிலான் தேசிய இளைஞர் பிரிவு உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார். குறிப்பிட்ட இனங்களை குறி வைத்து ஒரு தரப்பினர் அடிக்கடி இனத்துவேச கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இது ஒற்றுமையை சீர்குலைக்கும். ஆகவே அரசாங்கம் உடனடியாக சட்டத்தை இயற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீபன் சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார். மலேசியா இளம் பேட்மிண்டன் வீராங்கனை கிஷோனாவை இனத்துவேச வகையில் சாடிய நபர் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
