
மலேசியர்கள் வெளிநாடு செல்ல My Travel Pass தேவையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று முன்தினம் அறிவித்தார். அந்த வகையில் மலேசியர்கள் இனி My Travel Pass பயன் படுத்த தேவையில்லை என்று பிரதமர் கூறியிருப்பதை வரவேற்பதாக கின்ளான் கேபி டிராவல்ஸ் உரிமையாளர் கேபி சாமி தெரிவித்தார். மேலும் நவம்பர் 15ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இந்தியா வரலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் மலேசியர்கள் நவம்பர் 15ஆம் தேதிக்கு பின் இந்தியா செல்லலாம் என்றார் அவர். Oci card வைத்திருப்பவர்கள், கல்வி பயிலும் மாணவர்கள், சிகிச்சைக்கு செல்பவர்கள் இப்போது இந்தியா செல்ல அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
