25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

மழைக்காலத்தில் அவதிப்படும் 40 இந்திய குடும்பங்களுக்கு உதவும் வகையில் கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் தீவிரம்

பேரா மாநிலத்தில் செங்காட் கூரீங் வட்டாரத்தில் 60 ஆண்டு காலமாக அரசாங்க நிலத்தில் வசித்துவரும் 48 இந்திய குடும்பங்கள் அவ்வப்போது இடைவிடாத மழை காலங்களில் வெள்ளம் மற்றும் சரியான கால்வாய் இல்லாத காரணத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேரா மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் மஞ்சோங் கவுன்சிலர் ஆறுமுகம் அவர்களின் முயற்சியில் ,இந்த விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னர், அங்கே கால்வாய் சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தி இருப்பதாக தினகரன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles