25.8 C
Kuala Lumpur
Sunday, July 12, 2026

Vetri

திறமையை நிரூபிக்க தனேஷ் ராஜ்க்கு வாய்ப்பு வழங்குவீர்!

🔥 Views : 11
👁 Reading Now : 47

நாட்டின் மிகப் பழமையானப் பல்கலைக்கழகமாக விளங்கும் மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு நன்மையளிக்கும் வகையில் புதிய கருத்துக்களை வழங்குவதற்கு புதிய இயக்குநர் வாரிய உறுப்பினர் என்ற வகையில் திறனை நிரூபிக்க தனேஷ் ராஜூவுக்கு அனைத்துத் தரப்பினரும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அகமட் வலியுறுத்தினார். பல்கலைக்கழகத் தலைமைத்துவத்தில் இளம் தலைமுறையினரின் குரலுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு இதர பல்கலைக்கழகங்களுக்கான இயக்குநர் வாரிய உறுப்பினர் நியமனத்திலும் இதே போன்ற அணுகுமுறைக் கையாளப்படும் என்பதையும் அவர் மறுக்கவில்லை. தனேஷ் ஒரு தீவிரமானப் பல்கலைக்கழக முன்னாள மாணவர் மட்டுமின்றி அவரது பெயரை அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களே பரிந்துரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை ஆய்வுச் செய்தப் பின்னர் அப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சார்பில் இவரை நியமிக்க அமைச்சு இணக்கம் தெரிவித்தது என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles