29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

தோல்வியுற்ற அரசாங்கம்
கைதானவர்களுக்கு இலவச சட்ட உதவி

🔥 Views : 12
👁 Reading Now : 32

தோல்வியுற்ற அரசாங்கம் என்ற பேனருடன் பட்டாசு வெடித்து எதிர்ப்புகளை வெளிப் படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 20 இளைஞர்களுக்கு ஜோகூர் மாநில பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி இலவச சட்ட உதவியை வழங்க முன்வந்துள்ளது. நோன்பு பெருநாள் தினத்தன்று பத்து பஹாட் பாரிட் என்ற இடத்தில் ஒன்று கூடிய இளைஞர்கள் தோல்வியுற்ற அரசாங்கம் என்ற பேனரை ஏந்தி பட்டாசு வெடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை ஜோகூர் மாநில பக்காத்தான் ஹரப்பான் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles