
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி நேற்று மாநில முதல்வராக பதவியேற்றார். இவரின் நியமனம் குறித்து மலாக்கா அம்னோவில் உட்பூசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை மலாக்கா மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் மறுத்தார். மலாக்கா மாநில அம்னோ கிளைத் தலைவர்கள் முதல்வருக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளனர் என்று அவர் சொன்னார்.



