32.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

நவம்பர் 24 ஆம் தேதி தொடங்குகிறது தமிழியல் பன்னாட்டு மாநாடு 2021

🔥 Views : 7
👁 Reading Now : 67

தமிழ்மொழியின் மேன்மையையும் வரலாற்றுத் தொன்மையையும் எடுத்தியம்பும் வகையில் அனைத்துலக அளவில், முப்பெரும் இயக்கங்கள் சேர்ந்து ‘தமிழியல் பன்னாட்டு மாநாடு நவம்பர் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மலாயாப் பல்லைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மலேசியத் தமிழர் சங்கம் , சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இணையம் வழி அந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டில் உலகின் தமிழ்ச் சான்றோர் பலரும் கலந்து கொண்டு சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர். மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார். வாழ்வியல் மேம்பாட்டிற்கு தமிழின் கொடை’ எனும் கருப்பொருளுக்கேற்ப கிட்டதட்ட 120 கட்டுரைகள் படைக்கப்படவுள்ளதால், தமிழ் அறிஞர்கள் உட்பட பலருக்கும் இம்மாநாடு பயனாக அமையும் என்று அம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் மலேசியத் தமிழர் சங்கத்தின் தலைவருமான வழக்கறிஞர் எம்.ஜே.கனேசன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles