
சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை புதிதாக காலரா நோய் புதிதாக கண்டறியப்படவில்லை. எனினும், அந்நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிவதற்கு ஏதுவாக வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 21 ஆம் தேதி காலரா சம்பவம் ஒன்று கண்டறியப்பட்ட வேளையில் சம்பந்தப்பட்ட நபர் அந்நோயிலிருந்து முற்றாக குணமடைந்து விட்டதாக சிலாங்கூர் மாநில பொது சுகாதாரம், ஒற்றுமை, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர்ட சித்தி மரியா தெரிவித்தார்.



