32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

மலேசிய கால்பந்து பெண்கள் நடுவர் பயிற்சியில் ஏழு இந்திய பெண்கள் பங்கேற்கிறார்கள்

எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பெண்கள் நடுவர் பயிற்சியில் இம்முறை 7 இந்திய பெண்கள் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மலேசிய கால்பந்து வரலாற்றில் அண்மையில் 5 க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் நடுவர்களாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் மலேசிய பெண்கள் நடுவர் பயிற்சியில் ஏழு இந்தியப் பெண்கள் பங்கேற்பதாக இந்திய கால்பந்து சங்கத் தலைவர் ஸ்ரீ சங்கரி தெரிவித்தார்.
இந்த நடுவர் பயிற்சியில் பங்கேற்கும் ஏழு இந்திய பெண்களுக்கு தேவையான உபகரணங்களை பினாங்கு யூத்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜூ, பினாங்கு மாநில தலைமை நடுவர் சிவநேசன் முனியாண்டி, சபாபதி முனிசாமி மற்றும் சபா ரமேஷ் ஆகியோர் வழங்கி உதவி புரிந்தனர்.
எப்ஏஎம் நடுவர் 3 கிஸாஸ் பயிற்சியில் ஏழு இந்தியப் பெண்கள் பங்கேற்பது மிகப்பெரிய சாதனையாகும் என்று ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles