27.5 C
Kuala Lumpur
Tuesday, July 21, 2026

Vetri

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வகையில் பெட்டாலிங் ஜெயாவில் EVE மன நல காப்பகம் உதயமானது !

🔥 Views : 19
👁 Reading Now : 63

மன நிலை பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்வதோடு அவர்களுக்கு முறையான சிகிச்சையளிக்கும் வகையில் பெட்டாலிங் ஜெயா ஜாலான் டெம்பளரில் EVE மன நல காப்பகம் அதிகாரப்பூர்வ திறப்பு விழா கண்டிருக்கிறது. இந்த மனநிலை காப்பகத்தில் மொத்தம் 14 பேருக்கு சிகிச்சை அளிக்க கூடிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் ஜெரட் தெரிவித்தார். நாட்டின் அனுபவம் வாய்ந்த மனநல மருத்துவர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவோடு இந்த காப்பகம் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட் 19 தாக்கத்திற்கு பின்னர் மனநல பிரச்சினை அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டிய jaret, இந்த மையத்தில் குறைவான விலையில் நிறைவான சேவைகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

மலேசிய மனநல சங்கத்தின் தலைவர் டத்தோ அண்ட்ரு மோகன் ராஜ் இந்த மனநிலை காப்பகத்தை திறந்து வைத்து ஆதரவு வழங்கியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இங்கேயே தங்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles