33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மிம்தாவின் புதிய துணைத்தலைவராக டத்தோ எஸ் எம் முத்து போட்டியின்றி தேர்வு

🔥 Views : 7
👁 Reading Now : 70

மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோகப் பொருள் மறுசுழற்சி சங்கத்தின் புதிய துணைத்தலைவராக டத்தோ எஸ் எம் முத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நேற்று சங்கத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் சங்கத்தின் தலைவராக டத்தோஸ்ரீ பி. கிருஷ்ணமூர்த்தி மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சங்கத்தின் நடப்பு துணைத் தலைவராக இருந்த டத்தோ ஜோ சரவணன் பதவியை தற்காத்துக் கொள்ள போட்டியிடவில்லை. அந்த வகையில் மார்ஸ் மெட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ எஸ் எம் முத்து புதிய துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சங்கத்தின் மூன்று உதவித் தலைவர்களாக டத்தோ மலர்வாணன், டத்தோ முத்தழகன், டத்தோ டாக்டர் சேவியர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட வேளையில் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக மோகனா மெட்டல் உரிமையாளர் குணா, சாமி, புத்ராஜெயா பண்ணீர் செல்லம், டத்தோ பூபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மிம்தாவின் புதிய செயலாளராக முத்தப்பன் தேர்வு செய்யப்பட்ட வேளையில் டத்தோ பாஸ்கரன் மற்றும் டத்தோ ஹைய்டா ஆகியோர் ஆலோசகர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles