28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

போர்ட் டிக்சனில் மீன் பிடிக்கும் போட்டியில் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

🔥 Views : 5
👁 Reading Now : 51

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் போர்ட் டிக்சனில் நேற்று மிகப்பெரிய அளவில் மீன் பிடிக்கும் போட்டி நடைபெற்றது. போர்ட் டிக்சன் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நோய்த்தொற்று தாக்கத்தினால் ஒத்தி வைக்கப்பட்ட மீன் பிடிக்கும் போட்டி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் அதிக எடையுள்ள மீனைப் பிடித்தவருக்கு 12,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles